படிநிலைகளும் அவை தரும் உரிமைகளும்
புதிய உறுப்பினர், உறுப்பினர், அகமன்றம், சங்கத் தலைவர். பெரும்பாலான நகர, போர் முடிவுகளுக்கு அகமன்றம் தேவை.
| படிநிலையின் பெயர் | செய்யக்கூடியவை |
|---|---|
| புதிய உறுப்பினர் நிலை | பிறரை அழைப்பதைத் தவிர உறுப்பினர் செய்யும் அனைத்தும். |
| உறுப்பினர் நிலை | புதிய உறுப்பினர்களை அழைக்கலாம். பூட்டியிருந்தாலும் சங்கத்தின் கதவுகளையும் வாயில்களையும் இயக்கலாம். சங்க அரட்டையைப் பயன்படுத்தலாம். |
| அகமன்ற உறுப்பினர் | சங்கத்தின் குலச்சின்னத்தைத் துணி மேலங்கியாக அணியலாம். கட்டடங்களை வைக்கவும் மேம்படுத்தவும், நகரச் சேமிப்பையும் கருவூலத்தையும் திறக்கவும், உணவுப்பங்குகள், கப்பல் பழுதுபார்க்கும் கட்டணம், பட்டறைச் செய்முறைகளை அமைக்கவும், வணிக வண்டித்தொடர்களை அனுப்பவும், படைவீரர்களைச் சேர்த்து படைகளுக்குக் கட்டளையிடவும், வாயில்களைப் பூட்டவும் திறக்கவும், பாதுகாப்பு ஒப்பந்தங்களை நிர்வகிக்கவும், முற்றுகை நேரத்தை அமைக்கவும், கதாபாத்திரங்களை விலக்கவும் முடியும். /மன்றம் மூலம் பேசலாம். |
| சங்கத் தலைவர் நிலை | அகமன்றம் செய்யும் அனைத்தும்; மேலும் மையமரம் நடுதல், நகரின் பெயர் மாற்றுதல், விசுவாசம் அளிக்க மற்றொரு சங்கத்தை அழைத்தல், படைக்கு நேரடித் தலைமையேற்றல், சங்கத்தின் இன்றைய செய்தியை அமைத்தல். |
படிநிலை தேவைப்படும் இந்தக் கையேட்டின் ஒவ்வொரு தலைப்பிலும் அதைச் சுட்டும் அடையாளம் இருக்கும்.